ஒரு முஸ்லிம் ஆணோ - பெண்ணோ தனது பொறுப்புகளையும், கடமைகளையும் தெளிவாக உணர்ந்து செயல் பட துவங்கி விட்டால் அவர்களுக்கு 'பொழுது போக்கிற்காக' நேரம் கிடைப்பது அபூர்வமாகி விடும். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியே தலைக் கீழாக மாறி கடமையையும் பொறுப்பையும் உணர்வதற்குக் கூட நேரம் கிடைக்காமல் தொலைக் காட்சிக்கு முன் பல மணி நேரங்கள் ஒதுக்கபட்டு 'பொழுது போக்க'ப் படுகின்றன. புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து போய் - பிறருக்கு படித்துக் காட்டும் பழக்கம் அறவே இல்லாமல் போய் விட்ட அபாயகரமான நிலை தென்படுகிறது. இது நமது சந்ததிகளுக்கும் தலை முறைகளுக்கும் நாம் செய்யும் பெரும் துரோகமாகும். இந் நிலைக்கு கண்டிப்பாக நாம் இடங்கொடுக்கக் கூடாது என்பதை நீங்கள் உணர்ந்தால் உங்கள் வீடுகளில் சிறிய அளவிலாவது ஒரு நூலகத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் (சுவற்று அலமாரியில் பயனுள்ள நூல்களை பாதுகாத்து வைத்தால் கூட போதும்) தினமும் சிறிது நேரமாவது புத்தகங்களுடன் உங்கள் வாழ்வை பகிர்ந்துக் கொள்ளுங்கள். அதன் பலன் அலாதியானது என்பதை உணர்வீர்கள். அதற்கு வழிகாட்டுகிறது இந்தப் பகுதி. இஸ்லாத்தின் அடிப்படையை விளக்கும் புத்தகங்கள் மற்றும் சமூக மாற்றத்திற்காக எழுதப்பட்ட எந்த நல்ல புத்தகங்களும் இந்த பகுதியில் இடம் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் எழுதிய புத்தகமோ - பிறரால் எழுதப்பட்டு உங்களை கவர்ந்த புத்தகமோ எதுவாக இருந்தாலும் (அந்த புத்தகம் கிடைக்கும் முகவரியுடன்) எங்களுக்கு எழுதுங்கள். பரிசீலித்து வெளியிடுகிறோம்.
உங்கள் வீட்டிற்கும் ஒரு நூலகம் வேண்டும்!
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த கிளிக் செய்யவும்
|
புத்தகங்கள் இன்டக்ஸ் |
தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை.