www.idhuthanislam.com

விரும்பியவர்களுக்கு அனுப்ப....     முதல் பக்கம்
 

 நிஜாமுத்தீன் பற்றிய பின்னூடல்-ஈசா குர்ஆன் கிறிஸ்த்தவ வலைப்பூ

                                     ஜீ என்    


அன்பின் கொள்கை உள்ளங்களுக்கும் வாசக நெஞ்சங்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது இணையத்திற்கும் கிறிஸ்த்தவர்களின் இணையத்திற்கும் ஈஸா (அலை) அவர்கள் பற்றியும் கிறிஸ்த்தவ நம்பிக்கைப் பற்றியும் கருத்துப் பரிமாற்றம் நடந்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இந்தக் கருத்துப் பரிமாற்றம் பற்றிய இதுதான் இஸ்லாம் இணையத்தில் நிஜாமுத்தீனாகிய நான் கட்டுரைகளை எழுதி வருகிறேன். உமர் என்ற கிறிஸ்த்தவ சகோதரர் அவரது சொந்த வலைப்பூவான ஈசா குர்ஆனில் மறுப்பு எழுதி வருகின்றார். இதை நமது வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

இந்நிலையில் ஈசா குர்ஆன் என்ற அந்த கிறிஸ்த்தவ வலைப்பூவில் என்னைப் பற்றி ஒரு பின்னூடல் இடப்பட்டு அதை அந்த வலைப்பூவிலும் அவர்களின் சகோதர மன்றமான 'தமிழ் கிறிஸ்டியன்' வெப் தளத்திலும் பதித்துள்ளார்கள்.

அந்தத் தளங்களில் பதிக்கப்பட்டுள்ள பின்னூடலை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்

இந்தப் பின்னூடலில் என்னை (நிஜாமுத்தீனை)ப்பற்றி வைத்துள்ள குற்றச்சாட்டுகளில் இதுதான் இஸ்லாம் பற்றி வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு மட்டும் நான் இங்கு பதிலளிப்பேன். பிற என்னைப் பற்றிய தனிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை.

ஏற்கனவே இதே குற்றச்சாட்டுகள் இன்னும் சில இடங்களிலும் பதிக்கப்பட்டுள்ளது. என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் வைக்கப்பட்ட அவதூறுகள் அனைத்தையும் நாளை நியாயத்தீர்ப்பு நாளில் இறைவனிடம் நியாயம் கேட்பதற்காக சேமித்துக் கொண்டிருக்கிறேன். இந்த பின்னூடல் இட்ட சகோதரர் இன்னும் அவர் மனநிலையில் இருக்கும் எவரும் என்னைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு அவர்களுக்கு விருப்பமான இடங்களிலெல்லாம் எழுதிக் கொண்டிருக்கட்டும். அனைத்தும் சேமிக்கப்படும் நாளை இறைவன் முன்னிலையில் வைக்கப்பட்டு நியாயம் தீர்க்கப்படும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

இதுதான் இஸ்லாம் என்ற இந்தத்தளம் ஒரு பொதுவான தளம் என்பதால் அது குறித்து விளக்குவது என் கடமையாகும்.

இதுதான் இஸ்லாம் துவங்கியக் காலம் தொட்டு ஏழு சகோதரர்கள் இதன் நிர்வாகத்தில் இருக்கிறோம்

  1. காஜா முயீனுத்தீன் (சித்தார் கோட்டை)

  2. அப்பாஸ் அலிகான் (சென்னை)

  3. மீரா சாஹிப் (ஏர்வாடி)

  4. நிஜாமுத்தீன் (பரங்கிப்பேட்டை)

  5. நிஃமதுல்லாஹ் (சென்னை)

  6. அப்துல் அளீம் சித்தீக் (திருவாரூர்)

  7. ஹனீபா (பொட்டல் புதூர்)

இந்த ஏழுபேரில் சகோதரர் அப்பாஸ் அலிகான் அவர்கள் 'தனக்கு இணையம் மற்றும் மெயில் வசதி இல்லை என்பதால் - நிர்வாக ரீதியாக உடனுக்குடன் தொடர்புக் கொள்ளும் நிலை இல்லை' என்று கூறியதால் நிர்வாக ரீதியாக இல்லாமல் பரஸ்பர அடிப்படையில் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்று இதர நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால் அதை அவர் ஆமோதித்துக கொண்டார். அவரில்லாத மற்ற 6 சகோதரர்களும் இன்றுவரை தளத்தின் நிர்வாகிகளாக நீடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆறு பேரில் மீராசாஹிபைத் தவிர்த்து இணைய மற்றும் ஈமெயில் தொடர்பு எவ்வித குறைவுமின்றி நீடிக்கின்றது. சகோதரர் மீராசாஹிப் மற்ற பணிகளில் மும்முரமாக இருப்பதால் அவருடைய மெயில் தொடர்பு வசதி மட்டுமே குறைந்துள்ளது. ஆனாலும் நிர்வாகத்தில் ஒருவராக தொடர்ந்து இன்றுவரை நீடித்து வருகிறார்.

இந்தத்தளத்தின் ரெஜிஸ்ட்டர் - ஹோஸ்டிங் - கண்ட்ரோல் பேனல் அனைத்தும் வெப் மாஸ்ட்டரான சகோதரர் காஜா முயீனுத்தீன் அவர்களிடமேயுள்ளது. இணையத்தளத்தில் என்னுடைய ஆக்ரமிப்பு அல்லது அபகரிப்பு அல்லது இஸ்லாத்திற்கு எதிரான எழுத்துக்கள் இருந்தால் சகோதரர் காஜா முயீனுத்தீன் அவர்களால் என்னை இணையப் பணிகளிலிருந்து தடுத்து விட முடியும். ஏனெனில் அத்துனை கண்ட்ரோலும் அவர் கைகளில் தான் உள்ளன. இந்த உண்மைப் புரியாதவர்கள் தான் மனம் போன போக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இணையம் பற்றிய உண்மை நிலவரம் இதுதான்.

அடுத்து

இந்த பின்னூடல் இடப்பட்டுள்ள ஈஸா குர்ஆன் வலைப்பூவின் சகோதரர் உமர் அவர்களுக்கு.

நீங்கள் அந்தப் பின்னூடலை வெளியிட்டு உங்களுக்கு நியாயமென்று தெரிந்தவற்றை எழுதியுள்ளீர்கள். நன்றி. இது போன்ற பின்னூடல்கள் என் பணியைக் குறைத்துவிடப் போவதில்லை. கடந்த பல ஆண்டுகளாக ஆதிக்கவாதிகளாலும் பொய்யர்களாலும் நான் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, மிரட்டப்பட்டு வந்துக் கொண்டிருந்தாலும் என்னால் ஆன இறைப் பணிகளை நான் செய்துக் கொண்டிருக்கிறேன். (சிறந்தப் பாதுகாவலனாக இறைவன் இருக்கிறான்) இறைவன் நாடும் வரை என் பணி தொடரும்.

ஈஸாவின் வரலாற்று தொடருக்கு நீங்கள் எழுதியுள்ள மறுப்புக்கான பதில்களை நான் நிறுத்தியுள்ளேன். காரணம் பைபிளில் என்னக் குறையுள்ளது, என்ன மாற்றம் நடந்துள்ளது என்று நீங்களும் உங்கள் கொள்கைக் காரர்களும் பல இடங்களில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இயேசுவின் வரலாற்று தொடர் இறுதியில் நாம் பைபிள் நிலவரங்களை எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் இன்றைக்கு பைபிளைப் பற்றியே முதலில் எழுத வேண்டும் என்ற நிலையை நீங்களும் உங்கள் கொள்கைக் காரர்களும் ஏற்படுத்தி விட்டதால் மற்ற மறுப்புகளை கொஞ்சம் ஒத்தி வைத்து முதலில் பைபிள் பற்றி எழுத எண்ணியுள்ளேன். பைபிளின் நிலவரம் என்னவென்று தீர்மானிக்கப்பட்டு விட்டால் மற்றவையை தீர்மானிப்பது சுலபமாகி விடும் என்பதால் உங்கள் தூண்டுதலுக்கு நன்றி.

உங்கள் எழுத்தையும் எங்கள் எழுத்தையும் மக்கள் படிக்கின்றார்கள். சிந்தனைமிக்கவர்களுக்கு உண்மை எதுவென்று புரியும். அதனால் நீங்களும் எழுதுங்கள். நாங்களும் தொடர்கிறோம். இனி உங்கள் தளங்களில் என்னைப் பற்றிய பின்னூடல்கள் பதிக்கப்பட்டால் என்னிடமிருந்து பதில் வராது என்பதை மீண்டும் ஒரு முறைக் கூறிக் கொள்கிறேன்.

அன்புடன்

சகோதரன்

ஜி.நிஜாமுத்தீன்

19-9-2007

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை