| |
|
ஹலோ....டென்ஷன் ஸ்பீக்கிங். (மொபைல் சொல்லும் கதை) |
|
அபூஅஃப்ரின் - முத்துப்பேட்டை |
டமார்.. டூமீல்.. என்ன மாப்பிள்ளை.. சத்தம்.. குண்டு வெடிப்பா ..?..! ஒண்ணுமில்லை.. மாமூ.. நெற்று தான் புதுசாக மொபைல் போன் வாங்கிட்டு வந்து இருக்கான்.. ஆசையாக காதலிக்கு பேசிக்கொண்டு இருந்தான்.. பேசிக்கொண்டு இருக்கும் போதே வெடிச்சுடுச்சி .. என்ன செய்றது காது போச்சு.. விலை அதிகம் கொடுத்து வாங்கி இருக்கான்.. காசும் போச்சு.. முன்னாடியெல்லாம் டிபன் பாக்ஸில் குண்டு, ரேடியோவில் குண்டு, தேங்காயில் குண்டு என்று யாராவது ஒரு தீவிரவாதி வைத்து விட்டு போய் விடுவான். ஆனால் தற்போது மொபைலிலும் குண்டு வைப்பதும் ஒரு சாதாரண விஷயமாக போய் விட்டது. இதனை வைப்பது யாரோ தீவிரவாதி கிடையாது மொபைல் தயாரிக்கும் கம்பெனியே இந்த வேலையினை செய்கிறது என்றால் ஆச்சரியம் தானே. சென்ற மாதம் பெங்களூர் மற்றும் லக்னோவில் மொபைல் போன் பேட்டரி வெடித்து சிதறியது என்ற செய்தியானது சில ஊடகத்துறையில் வந்தது. கான்பூரில் நகரில் உள்ள ராஜீவ் நகர் என்ற இடத்தில் பார்மஸிஸ்ட் படித்துக்கொண்டு இருந்த இளைஞனின் காதானது நோகியா 1100 போன் வெடித்ததால் சிதறியது. மற்றும் அதே போல் ஒரு சம்பவம் பெங்களூரில் பி.எல். 5சி என்ற அலைபேசி பேட்டரி வெடித்து சிதறியது. தரம் குறைந்த போனை சார்ஜில் வைத்து பேசிக்கொண்டு இருந்ததால் அது வெடித்து இருக்கிறது. தற்போது காலங்கள் வேகமாக சென்று கொண்டு இருக்கிறது. ஆகையால் அவற்றிற்கு ஈடுக்கொடுக்க முடியாத மனிதன் டென்ஷன் டென்ஷன் என்று சொல்லியே மற்றவர்களுக்கு டென்ஷனை உண்டாக்கிக்கொண்டு இருக்கிறான். மன நிம்மதி இல்லாத வாழ்வில் மனிதன் தற்போது மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான். மனிதன் நிம்மதியற்று இருப்பதற்கு ஒரு காரணமாக தொலைபேசியையும் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உலகில் தொல்லைக்கொடுக்கும் தொலைபேசியோ அல்லது அலைபேசியோ இல்லாத கைகளை பார்க்க முடியாது. உலகம் உங்கள் கைகளில்.. அதுபோல் ஆபத்துகளும் நம்முடைய கைகளில்.. பிறந்த சின்னஞ்சிறு பிஞ்சுகளின் கைகளில் அன்று, எனக்கு தெரிந்து விளையாட்டு பொருட்களை கொடுப்பார்கள் பெற்றோர்கள். ஆனால் தற்போது மொபைல் போனை விளையாட்டு பொருளாக நினைத்து பெற்றோர்கள் பிஞ்சுகளின் கைகளில் கொடுக்கிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள் யாரும் பார்க்காத சமயத்தில் வாயால் கடித்து பார்ப்பார்கள். நாம் அந்த போனை உபயோகப்படுத்தியதால் அதிகமான அளவில் கண்ணுக்கு தெரியாத பல திசுஅழுக்குகள் படிந்து இருக்கும். ஆனால் அந்த குழந்தை அதனை ருசியாக கடித்துக்கொண்டு விளையாடும். பெற்றோர்கள் நம்ம புள்ளைதானே என்று விட்டு விடுவார்கள். அந்த அழுக்கு பிள்ளையில் வயிற்றுக்குள் போய் வேலை செய்யும். சிறிது நேரம் கழித்து அந்த குழந்தை அழும்.. இப்போ.. தானே பால் குடித்தாய்.. என் அழுகுறாய்.. என்று தாயானவள் கேட்பாள்.. பதில் சொல்ல முடியாத பிள்ளை அதிகமான சப்தத்தில் அழும்.. அழும்.. அழுதுக்கொண்டே இருக்கும்.. என் புள்ளைக்கு என்ன ஆச்சோ.. எது ஆச்சோ.. யாரோ மந்திரித்து விட்டார்கள்.. நல்ல இருந்த புள்ளை.. அழுவுதே.. ஓடுவார்கள் மந்திர வாதியிடமோ அல்லது மருத்துவரிடமோ.. பல செலவுகள் அதன் பின்னர். தற்போதைய இளைஞர்களின் கைகளில், எம்.பி 3, மற்றும் எம்.பி 4 உள்ள அலைபேசிகள் உள்ளன. அதனை அவர்கள் ஒரு நாளில் பல மணி நேரங்கள் வரை காதில் வைத்து கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவற்றினால் வரும் பின் விளைவுகள் என்ன என்பது அவர்களுக்கு தெரியாது. அதிக நேரங்கள் அலைபேசிகளை காதில் வைத்து உபயோகப்படுத்துவதால் மூளை புற்றுநோய் வருவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. தலை வலி என்று சிறிது வயதிலேயே கண்ணாடி போடும் பல இளைய சமுதாயத்தினர் அதிகரித்து விட்டனர். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் மொபைல் போனை பேசும் போது உபயோகப்படுத்தினால் காதானது கேட்கும் சக்தியினை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக்கொண்டே வரும். அத்துடன் ஒரு நாளில் யார் அதிகமான நேரம் மொபைல் போனை உபயோகத்தினாலும் இந்த அவஸ்தை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதாவது ஆங்கில எழுத்துக்களான S, F, H, T மற்றும் Z போன்ற எழுத்துக்களை நம் கேட்கும் சக்தியினை இழக்கின்றோம். இந்த எழுத்துக்களை அதிக உச்சரிப்பில் சொன்னால் தான் நம்மால் கேட்க முடியும். இந்த அறிக்கையானது, சென்ற மாதம் லண்டனில் நடைபெற்ற காது, மூக்கு, தொண்டை சம்மந்தமாக நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்டது. அலைபேசிகளில் பல ரேடிய கதிர்கள் உள்ளன. அலைபேசியினை பேசும் போது நம்முடைய காதானது அதனை ஈர்த்துக்கொள்கிறது. சட்டை பைகளிலோ அல்லது பேண்ட் பைகளிலோ மற்றும் உடம்பில் எங்கு வைத்து இருந்தாலும் ரேடிய கதிர்களால் உடம்பானது பாதிக்கப்படும். ஒரு நபர் பத்து வருடங்கள் தொடர்ந்து அதிகமான நேரங்களை அலைபேசி பேசுவதில் செலவு செய்தால் அவருக்கு மூளை புற்று நோயானது வருவதற்கு காரணமாக அமைந்து விடும் என்ற ஆய்வானது சுவீடன் நாட்டிலிருந்து வெளியாகி உள்ளது. Professor. Lennart Hardell of the University Hospital in Orebro and Professor Kjell Hansson Mild of Umea University ஆகிய இருவரும் 11 நாடுகளில் நடத்தி ஆராய்ச்சிக்கு பின் இந்த அறிக்கையினை தந்துள்ளனர். அலைபேசிகளில் விளையாட்டுகளை அதிகமாக சிறார்கள் விளையாடுகிறார்கள். இதனால் அவர்களும் உடல் உபாதைகளுக்கு ஆளாகி விடுகிறார்கள். ஆகையால் அலைபேசி விளையாட்டுகள் (Mobile Games) உள்ள மொபைல் போன்களை சந்தைகளில் விற்பனை செய்யக்கூடாது என்று கோரிக்கையினை 17 நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இப்போது எல்லாம் வாகனங்களில் போய் கொண்டு இருக்கும் போது, மொபைல் போனில் பேசிக்கொண்டு சென்றால் அது ஒரு ஸ்டைலாக இருக்கிறது. ஆனால் சிறிய கவனம் நம்மிடம் இல்லாமல் போனால் அதுவே நம்முடைய மரணத்திற்கு கொண்டு செல்லும். பல இடங்களில் பல விபத்துகள் எதனால் ஏற்பட்டது என்பதினை கொஞ்சம் ஆராய்ந்தால் டிரைவர் போன் செய்துக்கொண்டு வண்டி ஒட்டினான்.. ஆகையால் தான் விபத்து ஏற்பட்டது என்று சாதாரணமாக எல்லோரும் சொல்வர்கள். சர்க்கஸ் தொழில் புரிபவர்கள் கயிற்றில் நடக்கும் போது எப்படி பேலன்ஸ் இல்லாமல் போனால் மரணத்தை தழுவுவார்களோ அது போல் போன் செய்துக்கொண்டு, கவனம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் நமக்கும் மரணம் தான். ஒரு நிறுவனத்தினை பற்றியோ அல்லது ஒரு வியாபாரத்தினை பற்றியோ விசாரிக்க வேண்டுமானால், தற்போது எல்லா நாடுகளிலும் கால் சென்டர்கள் (Call Centre) கால் பதிந்து விட்டன. இந்த கால் சென்டர்களில் நடக்கும் பிரச்சனைகளும் மற்றும் அவஸ்தைகளும் நமக்கு தெரியாது. அங்கு வேலை செய்யும் ஆணாக இருந்தால் ஏதோ ஸ்டைலாக டை கட்டிக்கொண்டு வேலைக்கு போவார்கள். பெண்ணாக இருந்தால் பார்ப்பவர்களை கவரக்கூடிய அளவில் உடை அணிந்து மிடுக்காக செல்வார்கள் என்று தான் நம் நினைக்கிறோம். ஆனால் உள்ளே நடக்கும் சில பிரச்சனைகளை நாம் பார்த்தோமானால், பல சிக்கல்கள் உண்டு அங்கு. ஒரு கால் சென்டரில், ஒரு நாளைக்கு குறைந்தது 50 லிருந்து 200 போன்கள் வரை வரும். மற்றும் ஒரு செகண்டிற்கு ஒரு முறையேனும் கால் சென்டரில் உள்ள டிரிங்க் டிரிங்க் என்று போனில் அழைப்பு மணியானது ஒலிக்காமல் இருக்காது. அலுவலகத்தில் உள்ளே ஏசி வேலை செய்வதால் குளிராக இருக்கும். ஆனால் அங்கு வேலை செய்பவர்களின் உள்ளமோ எப்போதும் சூடாகவும் எரிச்சலாகவும் இருக்கும். எல்லா போனுக்கும் சரியான பதிலை சொல்ல வேண்டும். யாரிடமும் கோபமாகவோ அல்லது டென்ஷனாகவோ படக்கூடாது. அடுத்த லைனில் உள்ளவர்களின் மன நிலையினை ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டு பதில் கூற வேண்டும். அடுத்தவர்களிடம் கோபமாக பேசினால் வேலையினை விட்டு தூக்கி விடும் நிறுவனம் என்ற பயத்துடன் இருப்பார்கள். கஷ்டமர் போய் விடுவார்கள் என்ற கவலை ஒரு பக்கம். பொறுமையை மேற்கொள்ள வேண்டும். அடுத்த லைனில் உள்ளவர்கள் கோபமாக பேசினாலும் சாந்தமாக இவர்கள் பேச வேண்டும். சொல்ல வந்த செய்தியினை பக்குவமாக சொல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டில் அவர்கள் இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் போய்க்கொண்டே இருக்கும்.. என்ன செய்ய முடியும்.. இதனை நினைத்து நினைத்து அங்கு வேலை செய்பவர்களுக்கு இரத்தங்கள் கொதித்துக்கொண்டே இருக்கும்.. நரம்புகள் தளர்ந்துக்கொண்டே இருக்கும்.. வேலை முடிந்து வீட்டிற்கு போனால் அதனை விட பெரிய அலை பேசி மனைவியானவள் இருப்பாள். ஆபீஸீலே.. தொலை பேசி தொல்லை.. வீட்டிற்குள் வந்தால் உன்னுடைய தொல்லை.. என்று மனம் புலமும் பல கணவன்கள் ..இந்த அவஸ்தைகள் அலுவலக வேலை செய்யும் அனைவருக்கும் பொருத்தும். வளைகுடா நாட்டில் உள்ள பல நபர்கள், அவர்கள் காலை சிற்றூண்டி சாப்பிடுவதே கிடையாது. உடனே வேலைக்கு போக வேண்டும், வேலை செய்யும் இடத்திற்கு வாகனம் வந்து விடும் என்ற அவசர கதியில் காலை உணவினை சாப்பிடுவதே இல்லை. இதனால் அவர்களுடைய உடலில் உள்ள இரத்தங்கள் குறைந்த அழுத்ததினால் பாதிக்கப்படுகிறது. மற்றும் வளைகுடாவில் எந்த உணவுப்பொருட்களை எடுத்துக்கொண்டாலும் அதிகமான அளவில் கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களாக தான் இருக்கிறது. அதனை சாப்பிடுவதால் கொழுப்பு சத்தான உடலில் அதிகம் ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இங்குள்ள பலருக்கு இரவு 12 மணிக்கு மேல் தான் தூக்கமே வரும். மற்றும் காலையில் சீக்கிரம் எழுப்ப வேண்டும் என்ற கவலையுடன் படுக்கைக்கு போவார்கள். அந்த தூங்கும் நேரத்தில் மனைவி, மக்களின் நினைவுகள்.. ஊர் நினைவு.. பணம் சேர்க்க வில்லை.. மற்றும் இது போல் பல கனவுகள்.. இப்படியாக தூக்கத்தின் அளவானது குறைவாக போய்விடும். இத்தகைய பிரச்சனைகளால் மூளையானது சீக்கிரமாக பாதிக்கப்படுகிறது. அக்டோபர் 4 ம் தேதியன்று, துபாயில் உள்ள பல மொபைல் போன்களில் வைரஸ் தாக்குதல்கள் இருந்தன என்று துபாய் ஊடகங்கள் தெரிவித்தன. நமக்கு தெரியாத நம்பரிலிருந்து மிஸ்டு கால் வந்து அதனை நாம் எடுத்து பேசினால் உடனே நம்முடைய போனாது வேலை செய்யாது. அத்துடன் தேவையில்லாமல் மெஸேஜ் வந்தாலும் அதனை நம் திறக்கக்கூடாது. அப்படி திறந்தால் XALAN என்ற வைரஸ் போனில் வந்து நிற்கும். உலகத்தில் இத்தகைய வைரஸ் தாக்குதல்களால் நோக்கியா மற்றும் மொடோரோலா என்ற கம்பெனியின் அலைபேசிகள் 3 மில்லியன் பாதிக்கப்பட்டு உள்ளன என்றும் அந்த செய்தியானது குறிப்பிட்டு இருந்தது. மற்றும் அதனை பற்றிய செய்திகள் மேலும் தேவைப்பட்டால் CNN இணையத்தளத்தில் பார்க்கலாம் என்றும் கூறியது. டாக்டர். சபீர் சர்புதீன் (Ophthalmologist – Al Mulla Medical Centre – Dubai) அவர்கள் குறிப்பிடுகையில், சிறு குழந்தைகளிடம் போனை கொடுத்து விளையாட சொல்வதையும், மற்றும் காதில் வைத்து பேச சொல்வதையும் பெற்றோர்கள் தவிர்த்து கொள்ளவும். ஏனெனில் சின்னஞ்சிறுகளின் காதானது மெல்லிய தசைகளை கொண்டது மற்றும் வளரும் தசை பகுதியாகவும் உள்ளது. அவற்றில் அதிகம் சப்தத்தினை அவர்கள் கேட்கும் போது காதானது எளிதில் பாதிப்பினை அடைகிறது. அத்துடன் எலக்ட்ரானில் மற்றும் எலக்ட்ரிக் பொருள்களை விட்டு குழந்தைகளை தூரமாக்கி வைக்கவும் என்றும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்கிறார் அவர். கணிப்பொறி மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றில் உள்ள ரேடியக்கதிர்களை விட செல்போன்களில் அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். விஞ்ஞான வளர்ச்சி தேவை தான் அதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் விஞ்ஞான வளர்ச்சியானது இதுபோல் உள்ள சில பிரச்சனைகளால் இறைவன் நமக்கு அருளிய நம்முடைய பகுத்தறிவினை பாதிக்கும் விஷ(ய)மாக மாறும் போது..?..! அல்லாஹ் நமக்கு கொடுத்து அறிவினை கொண்டு நாம் பெற்ற கல்வியினை மற்றவர்களுக்கு ஏத்தி வைக்க வேண்டும். இதுவும் ஒரு தர்மம் தான். நல்ல மாதிரியாக சிந்திக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். செயலால் உங்களில் யார் சிறந்தவர் என்பதினை சோதிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி தான் வாழ்வினையும் மற்றும் மரணத்தினையும் அல்லாஹ்தஆலா எற்படுத்தி உள்ளான். ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதாகும். இன்னும் உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நிங்கள் பூரணமாக்கப்படுவதெல்லாம் மறுமை நாளில் தான். ஆகவே (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பை விட்டும் தூரமாக்கப்பட்டு சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்யப்படுகிறாரோ அவர், திட்டமாக வெற்றியடைந்து விட்டார்ஃ மேலும், இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. அல்குர்ஆன் 3:185 |
|
|
இந்தக் கட்டுரைப்
பற்றிய உங்கள் கருத்தை பதியுங்கள்.
|
|
|