|
சர்ச்சைகள் |
விமர்சனங்கள் |
விளக்கங்கள் |
இஸ்லாமிய மார்க்கம் - முஸ்லிம் சமுதாயம் இவற்றின் மீது காலாகாலமாக படிந்துள்ள பிற பார்வைகள் விசாலமானவை. அந்தப் பார்வைகளில் காழ்ப்புணர்ச்சியினால் படிந்தவை பெருவாரியானவை.
முஹம்மத்(ஸல்) அவர்கள் தங்கள் பிரச்சாரத்தை துவங்கும் போது முத்தரப்பு எதிர்ப்பலைகளை சந்தித்தார்கள். அவை. 1) இணைவைத்து வணங்கிக் கொண்டிருந்த மக்காவாசிகள். 2) வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் 3) கிறிஸ்த்துவர்கள்.
இந்த மூன்று சமூகங்களின் சித்தாந்தங்கள் கொள்கைளுக்கு எதிரான கடவுள் கொள்கையையும் முழுமையான சட்டக் கோட்பாடுகளையும் இஸ்லாம் முன் வைத்தது. பகுத்தறிவுடன் பரிசீலித்து சரியானவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு பதில் மேற்கண்ட மூன்று சமூகத்தாருமே இஸ்லாத்தை எதிர்த்தார்கள். அந்த எதிர்ப்புகள் பலதரப்பட்டவையாக இருந்தன. அன்றிலிருந்து துவங்கிய எதிர்ப்பலைகள் பல காலகட்டங்களை தொடர்ந்து இன்றுவரை நீடிக்கின்றன.
கல்வியும் - சிந்தனை புரட்சியும் மிகைத்து போய்விட்ட இந்த காலகட்டத்தில் இஸ்லாம் என்பதை பழமைவாதமாக சில - பல கல்வியாளர்கள் பார்ப்பதால் விமர்சனங்களுக்கு புதிய மூலாம் பூசப்படுகிறது.
இஸ்லாம் என்றைக்குமே விமர்சனங்களை கண்டு அஞ்சுவதில்லை. இஸ்லாத்தை கற்ற முஸ்லிம்கள் தவறை ஏற்கும் மனநிலையை பெற்றவர்கள். அதே வேளை முறையற்ற விமர்சனங்களுக்கு தகுந்த பதிலளிப்பதிலும் பின்வாங்காதவர்கள்.
இணையம் உலகஅளவில் கை விரித்துள்ளது. இஸ்லாமிய விமர்சகர்கள் ஏராளமாக அதில் கால்பதித்துள்ளார்கள். இஸ்லாமிய அறிஞர்களும் அதை விசாலாமாக எதிர்கொண்டு வருகிறார்கள். அவற்றை வரிசையாக இந்தப் பகுதியில் பார்க்கப் போகிறோம்.
|
சர்ச்சைகள் - விமர்சனங்கள் - விளக்கங்கள் |
|
நரகம் பற்றிய பயம்
ஏன்..?-2
புதிது
கொஞ்சம் அறிவு! கொஞ்சம் இயலாமை!! கொஞ்சம் வன்முறை!!! சுடர் (புதிது) |
| முஹம்மத்(ஸல்) - ஜைனப்(ரலி) திருமணம் ''காமம் காரணமா?அபூமுஹை |
| இம்ரானா - ஊடகங்களின் பலாத்காரம் - அபூ உமர். |
| அவளொரு முஸ்லிம் பெண். சுடர் |
|
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த... |
|
தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை. |