வாசகர்கள் கவனத்திற்கு!

பிற தமிழ் இணையங்களில் இஸ்லாம் பற்றி வரும் விமர்சனங்களுக்கு பல பக்கங்களிலிருந்தும் முஸ்லிம் சகோதரர்கள் ஆதாரப்பூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் சிறந்த முறையில் பதிலளித் வருகிறார்கள். அவை தொடராக இங்கு வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ். (அந்த இணையங்களில் பதிலளிக்கும் சகோதரர்கள் தங்கள் கட்டுரைகளை இதுதான் இஸ்லாமிற்கு அனுப்பி வைத்தால் அவை வெளியிடப்படும். கட்டுரை அனுப்புவோர் அவசியம் ஜிப் செய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம் - நிர்வாகிகள்)

அவளொரு முஸ்லிம் பெண் - சுடர்

(இந்தக்கட்டுரை வெளியிட்டதும் கட்டுரை மீதான விமர்சனம் வைக்கப்பட்டது. அதற்குரிய பதிலும் இங்கு வெளியிடப்பட்டுள்ளது - ஆர்)

உடை உடுத்தும் மனித பண்பாட்டில் சர்ச்சை மற்றும் விவாதப் பொருளாகிப் போய் நிற்பவள் முஸலிம் பெண் மட்டும் தான். உடுப்பில் வேறு எந்த சமுதாயமும் இந்த அளவு சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருப்பதாக நமக்குத் தெரியவில்லை. நிறைவாகவோ எத்துனை குறைவாகவோ உடுத்திக் கொண்டு வீதி தோரும் அலைந்தாலும் முஸ்லிம் சமுதாயம் உட்பட எந்த ஆணும் இந்த சர்ச்சையில் சிக்குவதில்லை. அப்படியானால் முஸ்லிம் பெண் மட்டும் இதில் ஏன் முதல் பொருளாகிப் போனாள்? என்பதை நாம் சிந்தித்துதான் ஆக வேண்டும்.

அவளொரு முஸ்லிம் பெண்.
 


ஆனால் முஸ்லிம் ஆண் - பெண் இவர்களின் நம்பிக்கை "இறைவன் தன் வாழ்வின் அனைத்துத் துறைக்கும் வழிகாட்டியுள்ளான்" என்பதாகும். (இந்த நம்பிக்கை சரியா.. தவறா.. என்பதை நாம் தனியாக விவாதித்துக் கொள்ளலாம்). இந்த நம்பிக்கைத்தான் முஸ்லிம் பெண்களை மற்றப் பெண்களை விட சற்று அதிகமாக உடை உடுத்தத் தூண்டுகிறது. இது அவள் விரும்பி ஏற்றுக் கொண்ட நம்பிக்கை அடிப்படையில் அமைந்த உடையாகும்.

திணிக்கப்படுகிறதா...
 

எந்தத் திணிப்பாவது நீண்டகாலம் வாழ்ந்த - வாழ்கின்ற வரலாற்றை எடுத்துக் காட்டுங்களேன் பார்ப்போம்.


வழக்குகள் ஏதும் உண்டா...?


தீர்மாணிக்க வேண்டியது பெண்களா..?

கட்டுரை மீதான விமர்சனம்

அவளொரு முஸ்லிம் பெண்
உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் என்னை தவறாக எண்ணவேண்டாம், உங்களின் கருத்துக்களை அறிந்துக்கொள்ள முயற்சி செய்கிற அதே வேளையில், உங்களுக்கு தெரிந்த சில பதில்களை நானும் தெரிந்துக்கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

"திணிக்கப்படும் எல்லாமே நீண்ட காலம் நிற்காது" - அப்படியென்றால் வரதட்சணை முறையை பெண்கள் விரும்புகிறார்களா? எப்படி அது தொடர்ந்து கொண்டிருக்கிறது?,

நான் நினைக்கிறேன்:
a) சிலர் அத்தகைய முறைகளை தொடர விரும்புகிறார்கள். அதனால் அது மேலும் நிலைத்துவிடுகிறது.

b) சிலர் அத்தகைய முறைகளால் தங்களை அடையாளம் காணுகிறார்கள். மேலும் அத்தகைய பழமையான வழிகளை பின்பற்றுவது தங்களின் கடமை என நினைத்து அதனை பிறர்மேல் திணிக்கிறார்கள,் அது தவறானதாக இருந்தும் கூட.

- வித்யசாகரன்

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றங்கள் நல்ல சூழ்நிலையை உருவாக்கும் என்பதால் அத்தகைய கருத்துக்களை முன் மொழியும் உங்களை மீண்டும் ஒரு முறை வரவேற்றுக் கொள்கிறேன்.

1)வரதட்சனை திணிக்கப்பட்டது என்பதில் மாற்றுகருத்து இல்லை. அது நீடிப்பதற்கு அனைவரும் அதை ஏற்றுக் கொண்டதுதான் காரணம் என்று கருத வேண்டாம். வரதட்சனைக்கு எதிரரக குற்றவியல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரணை - தண்டனை என்று அனேக எதிர்ப்பு அத்தியாயங்கள் அதற்கு உள்ளன. முஸ்லிம்களில் குர்ஆனும் - இறைத்தூதரின் வாழ்க்கை முறையும் தான் இஸ்லாம் என்று ஏற்றுக் கொண்டு பிரச்சாரம் செய்யும் மொத்த முஸ்லிம்களும் வரதட்சனையை எதிர்த்து பிரச்சாரம் செய்கிறார்கள். அனேக ஊர்களில் ஊரின் பொது அமைப்பு (ஜமாஅத்)கள் வரதட்சனை பெரும் திருமணங்களை அங்கீகரிக்க மாட்டோம் என்று முடிவெடுத்துள்ளார்கள். இதனால் வரதட்சனை திருமணங்கள் கணிசமாக குறைந்துள்ளன. மட்டுமின்றி பலநூறு சகோதரர்கள் "நாங்கள் அறியாமையால் வரதட்சனை வாங்கி விட்டோம் எங்களை பொருத்தவரை அது கடன் அந்த கடனை நாங்கள் அடைத்து விடுவோம் என்று உறுதிமொழி எடுத்து அதை நிறைவேற்றியும் வருகிறார்கள். எனவே திணிக்கப்பட்டாலும் மொத்த சமுதாயமும் அதை ஏற்றுக் கொண்டது என்ற வாதம் தவறு என்று கருதுகிறேன்.

இருந்தும் அது நீடிக்கிறது என்றால் அது அங்கீகாரத்தின் அடையளமல்ல. சிரமமின்றி கிடைப்பதால் பெற்றுக் கொள்பவர்களுக்கு எந்த வலியும் தெரிவதில்லை. அதுதான் வரதட்சனை நீடிப்பதற்கு காரணமாகும். மட்டுமின்றி திருமணத்திற்கு பிறகு மகன் மனைவியுடன் போய்விடலாம் என்ற பயம் கூட சில இடங்களில் வரதட்சனைப் பெறுவதற்குரிய காரணமாக முன் வைக்கப்படுகிறது.
 

 

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த...

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை.

www.tamilmuslim.com